எத்தனையோ கவிவரிகள்
வடித்துவட்ட போதும், - தமிழனாய்
எனைப் பிரசவித்த
உனக்காய் ஒருவரி எழுத
- என்
பேனைக்கருவிக்கோ! பேசத்தெரியவில்லை.
என்த் தாய் - எனை
மட்டும்
ஒற்றையாய்த் தாங்கி
பிரசவிக்கும்ப் போதே
உயிர்ப்போகும் வேதனை
அடைந்ததாய்,
ஊர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
எத்தனைக்
கவிஞர்களை,
எத்தனை எழுத்தாளர்களை,
எத்தனை கதாசிரியர்களை,
ஒரேப்
பிரசவத்தில் ஈன்றவள் நீ
உன் பிரசவத்தின்
வேதனைதான் எப்படி இருந்திருக்கும்?
உன் இரத்தத்தைப் பாலாக வார்த்து,
பருகிய ஒரு துளியே - ஒரு
தமிழனை உருவாக்கியதென்றால்,
உன் ஒட்டு மொத்தப் பாலையும் - நீ
சுரந்தால், - அதைத்தாங்க
இப் ப10மிக்கெங்கே வழுவிருக்கிறது?