
எங்கேயோ
தொலைத்து
விட்டோம்
எங்கள் முகவரியை….
வாக்களித்தே
தேய்ந்து போனது
எம்
ஆயுள் ரேகை….
எம் கவசம்,
தேயிலை பறித்த போது
படிந்த கரைகளின்
மொத்தம்….
சிந்திய இரத்தத்திற்கு
இறக்குமதி - நமக்கே
உச்சரிக்கத்
தெரியாத
கணிணிகள்…
வாக்களித்த
எம் வீடுகளுக்கு
இங்கே கதவுகள்
இல்லை…
வாக்கு கார்டுகள
நோட்டு சீட்டுகளாகி
நேரத்திற்கொரு -
உடை
மாற்றிக்கொள்கிறது
ஒரு சிலரின்
வீட்டு சுவர்கள்…


















