Tuesday, October 14, 2008

தண்டனையா?






என் அவஸ்தைகளை
விரல்கள் வருட- இவ்
வெண்
தேவதைக்கு சொல்கிறேன்

மெதுவாய் நான் அவளை
வருடும் போதெல்லாம் - என்
வலிகளுக்கு ஒத்தடம் தருகிறாள்

உடைகள் இருந்தும் - என்
காதலுக்கு
உடுத்தத் தெரியவில்லை
போலியாய் உதட்டுக்கு
சாயம் புசுவதை விட அதன்
நிர்வாணம் மேலானதென்று…..

என் உணர்ச்சிகள்;,
காதலின் புழுக்கம்,
உண்மையின் நிறம் - இவைகள்
உன் மௌன தணலின் மேல்
தவமிருக்கின்றன…

என் எழுத்துகள் - மட்டும்
தெரியும் கவிஞனுக்கு
வலிகளின் ரணம்,
உதட்டின் முனகல்,
கண்ணீருக்குள் காதல் - மர்மமாய்
கொல்லப்படுவது ஏன்
புரியவில்லை?

என் இதயத்திற்கு - காதல்
தந்த காயத்தை ஏன் கண்ணீரால்
கழுவுகிறாய்? எரிகிறது என் இதயம்..

என் விரல்களில் - ஒன்றை
உடைத்திருக்கிறேன், - இதய
நரம்பொன்றை அருத்திருக்கிறேன்,
இவை தான் என்
பேனைக்கு
நிறம் தந்திருக்கிறது…

என் வேதனைகள் - ஒரு நாள்
உனக்கு
வேதமாகும்
அதுவரை,
கொதித்துக்கொண்டிருக்கும் கண்ணீரில்
என் இதயத்தைப்
பிழிந்து
ஒத்தடம் இடுகிறேன்….







No comments: