Tuesday, October 14, 2008

தேடாதே…!






பூக்களின்
நறுமணத்தைப் போல்
என்னுடன் வாழும்
உன்
நினைவுகளையும் - உன்னால்
பிரிக்க முடியாது…

நம்
இதயங்கள்
பேதமற்றிருக்கும் போது,
நமை பிரித்து
வைப்பதாய் கருதும்
உடல் வெறும்
கூடுதான்…

எனக்கு தெரியும்
உடலில்லாத - காற்று
அறியும் உணர்வுகளை
நிச்சயம்
நீயும் அறிவாய்…

உன்
கோபத் தீ
பொசுக்குவதற்கு -
நான்
பஞ்சுப்பொதி அல்ல
பகலவன்…

ஒரு
மூங்கில் காட்டிற்கு
புல்லாங்குழலை
அறிமுகம் செய்யப்
பார்க்கிறாயா?

உன்னுடன்,
உன் இதயத்துடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
எனக்குள், - ஒரு
புதிய
இதயத்தை
தேடாதே…!

No comments: