Saturday, August 30, 2008

தொலைந்த முகவரி

எங்கேயோ தொலைத்து
விட்டோம் எங்கள் முகவரியை….
வாக்களித்தே
தேய்ந்து போனது
எம் ஆயுள் ரேகை….
எம் கவசம்,
தேயிலை பறித்த
போது படிந்த
கரைகளின் மொத்தம்….
சிந்திய இரத்தத்திற்கு
இறக்குமதி - நமக்கே
உச்சரிக்கத் தெரியாத
கணிணிகள்…
வாக்களித்த எம்
வீடுகளுக்கு இங்கே
கதவுகள் இல்லை…
வாக்கு கார்டுகள
நோட்டு சீட்டுகளாகி
நேரத்திற்கொரு -
உடை மாற்றிக்கொள்கிறது
ஒரு சிலரின்
வீட்டு சுவர்கள்…

தண்டனையா?

என்
அவஸ்தைகளை
விரல்கள் வருட-
இவ் வெண் தேவதைக்கு
சொல்கிறேன்
மெதுவாய் நான்
அவளை வருடும்
போதெல்லாம் -
என் வலிகளுக்கு
ஒத்தடம் தருகிறாள்
உடைகள் இருந்தும் -
என் காதலுக்கு உடுத்தத்
தெரியவில்லை
போலியாய் உதட்டுக்கு
சாயம் புசுவதை விட
அதன் நிர்வாணம் மேலானதென்று…..
என் உணர்ச்சிகள்;,
காதலின்
புழுக்கம்,
உண்மையின் நிறம் -
இவைகள் உன் மௌன
தணலின் மேல்
தவமிருக்கின்றன…
என் எழுத்துகள் -
மட்டும் தெரியும்
கவிஞனுக்கு வலிகளின் ரணம்,
உதட்டின் முனகல்,
கண்ணீருக்குள் காதல் -
மர்மமாய் கொல்லப்படுவது
ஏன் புரியவில்லை?
என் இதயத்திற்கு -
காதல் தந்த காயத்தை
ஏன் கண்ணீரால் கழுவுகிறாய்?
எரிகிறது என் இதயம்..
என் விரல்களில் -
ஒன்றை உடைத்திருக்கிறேன், -
இதய நரம்பொன்றை
அருத்திருக்கிறேன்,
இவை தான் என்
பேனைக்கு நிறம்
தந்திருக்கிறது…
என் வேதனைகள்
-
ஒரு நாள் உனக்கு
வேதமாகும் அதுவரை,
கொதித்துக்கொண்டிருக்கும்
கண்ணீரில் என்
இதயத்தைப் பிழிந்து
ஒத்தடம்
இடுகிறேன்….

தணல் மனம் வீசட்டும்...

எவரும் அறியாது -
எனக்குள்
என் ஆன்மாவில்
பதியும் உன் நினைவுகளை
உன் நினைவுகளும் தான்
தற்காலிக இருட்டினோடு
உறங்காது….

என் கண்கள்
பகிர்ந்து
கொள்கிறது…..
உனக்காய் வற்றிவிட்ட
என் இதயக்கிணற்றில்
கவிதைகள் போலி -
உன் இனி - ஒரு
இதயமும் தான்,
நினைவு மீனுக்கும்
உயிர் இருக்காது….

என் சோகங்களை
அலங்கரித்து தருகிறேன்,
எல்லா மீன்களும் தன்
பத்திரமாய் வைத்துக்கொள்
துடிப்புகளை
துறந்து
விட்டிருக்கும்…

ஒரு நாள்,
உன் நினைவுகளோடு -
உறங்கும் என் என்
கல்லறைக்கு
உதவும்…
சவத்தை - நீ உன்
பார்வையால் சூரியனின்
பிம்பம் தெறிக்க
அசுத்தமாக்காதே!
ஒரு மழை நாளில்,
ஒரு நொடி தோன்றும்
போலியான -
உன் வானவில்லாய் -
உன் அன்பால் கண்ணீர்
இதயத்தில் நானிருப்பேன்,
பொழியாதே!
என் உடல் நிரந்தரமாய்
உறங்கும் வேளையில்…..
என் உடலுடன் உன்
நினைவுகளும்
எனக்கு கவசம் -
என் புதையட்டும்….
காதலின் நிஜம் உனக்காய்,
உறவுகள் - உலகம் உறங்கிய
-
உன் இருக்க
-
எனை மட்டும்
நினைவுகளை இனி ஏன்
அநாதையாக்கினாய்?
என் உதடுகள்
உச்சரிக்காது…..
எத்தனை தடவைகள் -
உன் அழைப்பு மணிக்காய்
இதுநாள் வரை என்
தொலைபேசி
தவமிருந்திருக்கும்?
இரகசியமாய்
பற்றிக்கொண்டிருந்த
எனக்கு ஏமாற்றங்களை
என் - அவஸ்தைகளை
பரிசளித்த உனக்கு
நீ இரை தந்த
இறைவன் யார்?
குளிர்காய்வதற்காய்
உயிருடன் தீ
மூட்டுகிறேன்…
வேண்டாம்!
உன் உறவுதனை
என் அன்போடு
ஒத்தி வைக்க -
என் போரிட்டு
-
நீ உணர்வுகளுக்கு
கொஞ்சம் ஜெயித்தால்…..
கற்றுக்கொடு….
உன் சுவாசத்தில்
என் தணல் மனம்
வீசட்டும்………
விடிந்து கொண்டிருக்கும்
இரவுகளில் -
நாளைய என்
இரவு மட்டும் விடியாது……

தமிழ்த்தாய்க்காய்!

எத்தனையோ கவிவரிகள்
வடித்துவட்ட போதும், -
தமிழனாய்
எனைப் பிரசவித்த
உனக்காய் ஒருவரி
எழுத - என்
பேனைக்கருவிக்கோ!
பேசத்தெரியவில்லை.
என்த் தாய் - எனை
மட்டும்
ஒற்றையாய்த்
தாங்கி
பிரசவிக்கும்ப்
போதே
உயிர்ப்போகும் வேதனை
அடைந்ததாய்,
ஊர் சொல்லிக்
கேட்டிருக்கிறேன்.
எத்தனைக்
கவிஞர்களை,
எத்தனை
எழுத்தாளர்களை,
எத்தனை
கதாசிரியர்களை,
ஒரேப் பிரசவத்தில் ஈன்றவள்
நீ
உன் பிரசவத்தின் வேதனைதான்
எப்படி
இருந்திருக்கும்?
உன் இரத்தத்தைப் பாலாக
வார்த்து,
பருகிய ஒரு துளியே -
ஒரு தமிழனை
உருவாக்கியதென்றால்,
உன் ஒட்டு மொத்தப் பாலையும் -
நீ சுரந்தால்,
-
அதைத்தாங்க
இப் ப+மிக்கெங்கே
வழுவிருக்கிறது?

தேடாதே…!


பூக்களின்

நறுமணத்தைப் போல்
என்னுடன் வாழும்
உன் நினைவுகளையும்
-

உன்னால் பிரிக்க
முடியாது…


நம்

தயங்கள்
பேதமற்றிருக்கும்
போது,

நமை பிரித்து
வைப்பதாய்
கருதும்

உடல்
வெறும் கூடுதான்…


எனக்கு தெரியும் உடலில்லாத -

காற்றுஅறியும் உணர்வுகளை
நிச்சயம்நீயும் அறிவாய்…

உன் கோபத் தீ பொசுக்குவதற்கு -
நான்பஞ்சுப்பொதி அல்லபகலவன்…

ஒரு மூங்கில் காட்டிற்கு
புல்லாங்குழலைஅறிமுகம்
செய்யப்பார்க்கிறாயா?

உன்னுடன்,
உன் ,
தயத்துடன்வாழ்ந்து
கொண்டிருக்கும்
எனக்குள், -
ஒரு புதிய ,
தயத்தைதேடாதே…!

Friday, August 29, 2008

வாசனையை....






நம் சொற்களின்
தாளிப்புகள் ஓய்ந்து
கிடக்கிறது…


உன் புகைப்படத்துடன்
மட்டும் சிரித்து
விளையாடி,

விடைபெற
முடியாத

தருவாய்களை
மட்டும்

தனக்கு
சொந்தமாக்கிக்

கொள்கிறது என்
விழிகள்…

என் புன்னகையை

கலைத்துவிட்டு
உடல்
முழுவதிலுமாய்

உன்
நினைவுகளை

தரித்துகொள்கிறேன்…

என் கடிகாரத்தின்
ஒவ்வொரு
முட்களும்

நாழிகைகளை
கூட

மெதுமெதுவாய்
நாட்களைப்போல் நகர்த்துகிறது…
உன்
இதயமே

என்
வாழ்வின்

பிரபஞ்சமாய்….

இசையை
இழந்த

பாடல்களை
போல்,

துடிப்பை துறந்து
வாழும்

இதயத்தைப்
போல்,

உன் குரலை விட்டு
விட்டு

குறுஞ்செய்திகளுடன்
உறையாடி கொண்டிருக்கிறேன்…

எப்போது எனக்கு -
மீண்டும் அறிமுகம்
செய்யப்போகிறாய்
உன் குரலின்
வாசனையை….?

எப்போது....






என்மௌனங்கள்
எனை கிள்ளிப்பார்க்கின்றன….

தூரத்தில் பக்கத்தில்,
என் காதுகளுக்கருகில்
மிகநெருக்கமாக
உன்குரல்களின்தீண்டல்…

என்காதல் சிறகுகள்
உன் - இதய
நந்தவனம் நோக்கி
பறப்பதற்குமுன் -
ஏன் நீநித்திரைக்கு
முத்தமிடுகிறாய்?

உன் இதழ்களுக்குள்
இறந்து போன
என்ஈரங்களை -
எப்ாபோது
மீட்டுத்தர போகிறாய்?

உன்இளைய சகோதரனை
எப்போது என் கரம்
சேர்க்கப் போகிறாய்?

தினமும் உன்
நெஞ்சில் உறங்கும்
என்கனவுகளுக்கு -
நீஎப்போது ......

குப்பி விளக்கு






கண்
விழித்து
கதை படிக்க
என் குட்டி தேவதை
மட்டும் - என்னுடன்
இன்னும் உறங்காமலேயே……

தலை சாய்த்தும்,
நிமிர்ந்தும், வளைந்தும்
எட்டிப்பார்த்தேன்,
எப்படியும் அவள் மட்டும்
ஏனோ
அசல் மாறா,
அதே 18 வயதிற்குள்…..

என்னையே பார்த்துக்
கொண்டிருக்கிறாள்,
என் நாணத்தை
மட்டும் அறியாதவளாய்…

என் இரு உள்ளங்கைகளும்,
வெட்கத்தால் முகம்
மறைக்கின்றன அவள்
மட்டும் - விடுவதாயில்லை
என் விரல் சந்துகளுக்குள்,
மீண்டும் நுழைகிறாள் -
எனை அணைத்தவாறே…….

ஜெயிக்கட்டும்..!






உதிர்வைப்
பற்றி

உணராமல் -
தினமும்

மலரும்
பூவைப்போல்

சந்தோஷத்தின்
அகராதியை
நம்

அன்பினால் அலங்கரிப்போம்…

எரியும்
தீபம்

தன்னை
எரித்து

சுடர்விடுகிறது,
பறப்பதற்காய் சவமாகும்
கம்பளி பூச்சியை
இழுத்து
செல்லாத எறும்புகள் -
தன் உணவையே

விட்டுத்
தருகின்றன…


மரத்திலிருந்து
மண்ணில்
சருகாகி,

தாவரத்திற்கு -
உரமாய் உயிரூட்டும்
இலைகள்….


அழுக்கான
உடல்களை
மறந்து

நாமும்
ஆன்மாவை காதலிப்போம்….

இவற்றை - இனி
ஜெயிக்கட்டும்
நம் இதயத்தின்
இரண்டு
அறைகள்…

கதறி அழும் காதல் குழந்தை








தாழிடப்பட்டிருக்கும்

உன் இதய அறையில்
என் சிட்டுக்
குருவிக்கொரு
சின்ன கூடு கட்ட
இடம்
தருவாயா?


நேற்றிரவு

பிறந்த குழந்தைக்கு,
ரேகைகள் கூட
இன்னும்
துள்ளியமாய்
துளிர் விடவில்லை

உன்
இதய

வாசலை
திறப்பதற்பாய்,

என்ன வாடகை
வேண்டும்?


எதுவாயினும்
தருகிறேன்
கேள்…


என் குருவிக்
குஞ்சிக்கே

உரித்தானஸ்பரிசங்கள்,
உன் இதயத்தில்
மட்டுமே இருப்பதால்
கேட்கிறேன்…..

துணையின்றி
தவிக்கும் -
என்குழந்தைக்கு,
உன் இதயத்துடிப்புகள்
துணை இருப்பதால்
கேட்கிறேன்…..


கொத்திப்பார்த்தாள்
உன் இதயகூட்டை,
தற்போது,
தன் சொண்டுகளை
காயப்படுத்திய
இரத்தக் கரைகள்
மட்டுமே
மிச்சமாய்…


உன்
இதயக்கதவுகள்
மட்டும்இன்னும்
திறக்கப்படாமலேயே….


எப்போது?






அநாதையான

என்
சொற்களை

உன்
உறவாக்கி

கவிதை
படைத்தாய்…


என்கண்கள்
நோக்கும்

கண்ணாடியின்

பிம்பங்களை

என்னுடன்

பேச
வைத்தாய்…

வருவாயா?








என் காத்திருப்புகள்
அத்தனையும்
அர்த்தப்படுகிறது
உன் வார்த்தைகளில்…

எனக்கே நான்
அந்நியமான
போது
உனக்கு
மட்டும்
எப்படி உரிமை
கொண்ட உறவானேன்?

நிசப்தமாய்
மோதும் உன்
ஞாபக அலைகள்
என் மௌன
கவிதைகளுக்கு
இசையமைக்கிறது…

திரும்பிய திசைகள்
தோறும்
என்விழித்திரையில்
தினமும்தெறிக்கின்றன
உன்பிம்பங்கள்…

உன் நினைவுகளில்
விடை பெறுகிறது
என்இரவுகள்
அங்கு உனக்கெப்படி?

உனக்காய் காதல் கடிதம்
தீட்டஎத்தனிக்கும்
போதெல்லாம்
என் புன்னகை
மட்டுமேமிஞ்சுகிறது…

நீ அருகில்
இல்லாமல்
அர்த்தப்படவில்லை
என்வெட்கங்கள்…

என்றும் என்
நினைவுகளில்
உன் கரம்தீண்டுகிறது…

என் கூச்சங்களை
கொலை செய்யும்
உன் வார்த்தைகளில்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்…

உன்வரவை
என்விழிகளுக்கு
விருந்தளிப்பதற்காய்
விரதமிருக்கிறேன்
விரைவில்
வருவாயா?

பெண்ணிற்காய்...






.....................................................................................................
பெண்ணே!
வாயால்
நீ வாதாடி
ஆறாத
ரணங்களை

அறைகளில்
கண்ணீரால்
கழுவியதுபோதும்…

நம்
நாட்டை

வாழ வைக்க
நீ

உன்
வயிற்றைகாய

வைத்ததுபோதும்…

உன் இரத்தம்
குடித்த
அட்டைகள்

கூட ஓடாய்
போன

உன்நிலை
கண்டுஓரமாய்
நிற்கின்றன…


உன்
வலிகளைசொல்லாத

வரலாறுகளும்
வெட்கங்கெட்டது
தான்…


கடவுள்
எழுதி

முற்றுப்புள்ளி
வைக்காத
கடிதங்களா?

நாம்இல்லை
இதுவரை
இருளுக்குள் மூழ்கியது
போதும்…


எரிய
தெரிந்தவர்கள்

எம்
உரிமைக்காய்

கொஞ்சம் -
எரிக்கவும்
கற்றுக்கொள்வோம்…


எரிந்தாலும்,
எரித்தாலும்,
ஒளி
கொடுப்பது

நாம்
தானே!



பேனை






என்னை நானே
பிரசவிக்க கர்ப்பம்
தாங்கிய
என் அன்னை…

எழுத்துக்கள்
உயிர் வாழதன்
குருதி
இழந்துசவமான தேவதை….

கொஞ்சம் தென்றலை
கொஞ்சம் புயலை
வானவில்லின்
வர்ணங்களை,
இருட்டின்
நடுவே இளம் பிறையை,
உதிக்கும் சூரியனை,
மறைந்த மனிதனை,
இத்தனையும் ஒற்றைத்
தாளில் உறைத்தவள் நீ…

எம்துயர்
துடைத்தேசருகான -
உன்ஆத்ம
சாந்திக்காய்
ஆண்டவன்
பாதம்தீண்டிய
கரங்களை
கொஞ்சம்
காண்பிக்க மாட்டாயா?



அந்த நொடி…!






...................................................
கடவுளுடன்
ஒரு கணம்
கோபித்துக்கொள்கிறேன்…
கடுங்குளிரில் கைகள்
இரண்டும் தேநீர்
கோப்பையை
பற்றிக்கொள்கிறது…

ஐன்னலின்அருகில்
பரிட்சயமான
இருவரின் முகங்கள்…

சற்று தூரத்தில்,
விழாவிற்கு
சென்று
விடைபெற்று
வந்தகுளிர்பாண
போத்தல்களை
நோட்டமிட்டு,
கரங்களால் பற்றிக்கொள்கிறான்
ஓர் ஏழை…ஓர் மனநோயாளி…

இல்லை,
அவன் மட்டுமே
இவ்வுலகில்
பொதுநலவாதி,
ஐாதி பேதம்
உணராதவன்…

கள்ளமற்ற
மனதிற்குசொந்தக்காரன்…

சுவரில் மோதும் பந்து,
தன்னிடமே
திரும்பிவருவதை
உணராதஒருவன்,

அந்த சிறிய
சிட்டின் சிறகுகளை
தன்அகோர
குரல்களால் தீண்டுகிறான்…

எதுவும்புரியாத
குழந்தையாய்,
விடைபெறுகிறான்
அந்த ஊமைப்பாடகன்…

என்மனதில்
மட்டும்விடாது
வந்து மோதுகிறது
கடவுளின் படைப்பு
பற்றிய கவலையும்….
ரணமும்….
.

என் தாய்






ஒரு மொட்டு

வெடிக்கும்சப்தத்தை

முழுதாய்உணர்ந்தவள்….
என் மழலை

மொழிகளுக்கு

வகுப்பெடுத்து அகராதி

அமைத்தவள்…


என்ஒவ்வொரு

உறுப்புகளுக்கும்

உருவம் தந்த

இரத்த வங்கியின்

இலக்கணம்…


நீவார்த்த

பாலிற்குவாழ்த்த

வார்த்தை இல்லை…


உச்சி மோந்து

என் நெற்றி

நனைத்த

உன் முத்தத்தின்

ஈரம்மூச்சுள்ள

வரை மறக்காது…


பனி படர்ந்த

மார்கழி இரவுகளில்

உன் மூச்சின்

வெப்பம் தானே,

எனக்கு போர்வையானது!


அன்னையே!

நீ பரிணாம சிற்பி,

எனை உருவமாக

செதுக்கியதும்

நீயல்லவா?

அலங்காரம்






தன் முதுகெழும்பின்

கிளைகளை முறித்துக்கொண்ட

பரிணாமம் மாறாத

மின்னலின் இரவு…

மேகம் கருத்து

பெய்த மழையை

கண்கள் சிவந்து

கண்ணீராய் பொழிந்தாள்…

கவலைத் தீ எரித்த

அவளின் கனவுகள்

விடியாத ஓர்

அஸ்தமனமானது…

காதல் !


கிடங்குகளில்

கற்பழிக்கப்பட்டவள்,

பிரசவித்ததென்னவோ

குரூரமாய் செதுக்கப்பட்ட

சவத்தையல்லவா?


புரிந்து
கொண்ட காதல்கள்

சுவர்க்கத்திற்கருகில்

சுடர் விடுகிறது…


பிரிந்து விட்ட

காதல்கள் தான் -
தன்னை மரணத்தால்

அலங்கரித்துக்கொள்கிறது….

ஆறுதல் செய்வாயா? ? ஆறுதல் செய்வாயா?










என்னவனே!

எப்படி இருக்கிறது -

எனக்கே எனை

கற்றுக்கொடுத்த

உன் பார்வைகள்?

கரை வரை வந்தும்

கால்கள் நனைக்காத

அலை போல், -

உன் இதழ்களுக்குள்ளேயே

மறைந்து கிடக்கும்

புன்னகை எப்படி
இருக்கிறது?

நாணல்களின் அசைவுகளை

தென்றல் கூட -

உன் ஓர
வகிடெடுத்த

அரைக் கூந்தலில் தானே

இரசித்தது!

எங்கே
மறைத்து

வைத்திருக்கிறாய்?

நட்சத்திரத்திற்கு ஒளி

கொடுத்த -

உன் கண்களின்

ஒளிக்கீற்றை…


நீ

இல்லாது
வாடிவிட்டன,

என் வீட்டின்
நந்தவன பூக்கள்,

சிரிப்பில்
சிதறும் உன்

எச்சிற்
துளிகளால்

அவற்றை
ஆறுதல்

செய்ய மாட்டாயா?

Sunday, August 24, 2008

சுயசரிதம்







நான்என்
கவிதைகளை

மீட்டுப்
பார்க்கிறேன்….
சுகமான தென்றல்

சோகங்களை
தனிமைப்படுத்துகிறது….
நந்தவன ரோஜா விசுவாசமாய் -

என்விரல்
தீண்டுகிறது….
அன்றைய

என்தேடலின்

வருத்தங்களுக்கு

நான்
மீண்டும்

தவமிருக்கிறேன்….


காலத்தின்
மாற்றங்களால்

கணக்கிறது – என்புத்தகப்
பை
கண்ணாடி கவிதைகளில்

என் அன்றைய பிம்பங்கள் -

மீண்டும்
பிறக்கின்றன்;….
அன்பாய் -

நலம்விசாரிக்கும்

என்கை உடைந்ததலையாட்டி

பொம்மை….
என்
மனதின்

அழுக்கு
உடைகளைகழற்றி

விட்டிருந்த

விரல்கள்….
இன்று
வரை

எந்த
அழுக்குகளையும்

அணிவிக்கவில்லை….

இன்றைய சுதந்திரம்





செய்யாத பாவங்களுக்காய்

எம் நாட்டின் நீதி

தேவதைகொலை

செய்யப்படுகிறாள்…
வீட்டின் வாசல்

முடிந்து வீதியில்

இறங்கி நடக்க,

ஒரு மைல் து}ரத்திற்கு

ஓராயிரம் கேள்விகளுக்கு

விடை கற்க வேண்டி இருக்கிறது…
எல்லை தாண்டிய

உறவுகளை

எம்முடன் இணைத்த

தொலைபேசிக்கு -

இன்றுஅடையாளம் தேவைப்படுகிறது…
அநியாயங்களுக்கு

விலை போகாத – எம்உயிர்களுக்கு

துப்பாக்கி முனையால்துாது

விடப்படுகிறது….

நினைவுகள்...

.............................................................................................................................................................................
என் இதயத்தை எரிக்கும்

ஓர்விநோதமான நெருப்பு

உன் நினைவுகள்…!
தேன் அருந்துவதற்காய்

உன்மனப்பூங்காவில்

அமர்ந்த போது –

ஒட்டிக்கொண்ட மகரந்த நினைவுகளைத்தான்

சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்…!
இனிப்பில் மொய்க்கும்

எறும்பைப்போல் -

தானேமலரும் பூவைப்போல்

தான்உன் நினைவுகளும்…!
என்மெழுகு மனதில்தினம் -

நீ

சுடர் விடுவதால் தான் நான்

உருகிக்கொண்டிருக்கிறேன்,

என்கண்ணீர் துளிகளும்

உறைந்துகொண்டிருக்கிறது….!
உன்நினைவெனும் சிறையில்

நெடுநாளாய்

கைது செய்யப்பட்டிருக்கிறேன்,

எப்போதுவருவாய் -

எனைமீட்பதற்கு…?

Saturday, August 23, 2008

அன்னையே!




உன் அந்தரங்க கருவறைக்குள்

வாடகையின்றி

எனை வளர்த்தவள் நீ..
ஆதவனின் ஓளியில்

தான்பூச்செடி கூட

மொட்டொன்றை

பிரசவிக்கிறது,

நீ மட்டும் தான்சுயமாய்

எனைபிரசவித்தவள்..
பிரபஞ்சத்தையே

பேசவைக்கும் - உன்மௌனங்களில்

தான்பூமித்தாயின்

பொறுமையையும் கூடஉணர்கிறேன்..
உச்சி மோந்து என் நெற்றி

நனைத்த உன் - முத்தத்தின்

ஈரத்தில் தோற்றுப்

போகின்றனபனித்துளிகள்..
உனை வரையறுத்து

தோற்றுப்போகும்

லிம்காவும்,கின்னஸ_ம்,
உலகம் முற்றாய் உணராத

உன் அதிசயங்களை எழுதஇன்னும் ஆயிரம்வான புத்தகம்,ஆயிரம் மேகத்தாள்கள்போதாது...