Friday, August 29, 2008

பெண்ணிற்காய்...






.....................................................................................................
பெண்ணே!
வாயால்
நீ வாதாடி
ஆறாத
ரணங்களை

அறைகளில்
கண்ணீரால்
கழுவியதுபோதும்…

நம்
நாட்டை

வாழ வைக்க
நீ

உன்
வயிற்றைகாய

வைத்ததுபோதும்…

உன் இரத்தம்
குடித்த
அட்டைகள்

கூட ஓடாய்
போன

உன்நிலை
கண்டுஓரமாய்
நிற்கின்றன…


உன்
வலிகளைசொல்லாத

வரலாறுகளும்
வெட்கங்கெட்டது
தான்…


கடவுள்
எழுதி

முற்றுப்புள்ளி
வைக்காத
கடிதங்களா?

நாம்இல்லை
இதுவரை
இருளுக்குள் மூழ்கியது
போதும்…


எரிய
தெரிந்தவர்கள்

எம்
உரிமைக்காய்

கொஞ்சம் -
எரிக்கவும்
கற்றுக்கொள்வோம்…


எரிந்தாலும்,
எரித்தாலும்,
ஒளி
கொடுப்பது

நாம்
தானே!



No comments: